சென்னை எழும்பூர் - விழுப்புரம் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அதன்படி சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரையிலான புறநகர் ரயில்களும், தாம்பரம் முதல் கடற்கரை வரை செல்லும் புறநகர் ரயில்களும் இன்று காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை ரத்து செய்யப்படுவதாகவும் சென்னை கடற்கரையில் இருந்து பல்லாவரம் ரயில் நிலையம் வரை மட்டுமே ரயில்கள் இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.