தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நவக்கிரக ஸ்தலங்களில் ராகு பகவானுக்கு,உரிய ஸ்தலமான திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திருநாகேஸ்வரத்தில் உள்ள சிவாலயத்தில் சிவராத்திரி அன்று ராகு பகவான் சிவனை வழிபட்டு அருள் பெற்றார் என்ற வரலாறு உள்ளது. இந்நிலையில் மகா சிவராத்திரியை முன்னிட்டு ஆயிரத்து 8 சங்குகளில் புனித நீர் நிறப்பப்பட்டு, சிறப்பு யாகங்களுக்கு பின்னர் நாகநாத சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.