உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பரிக்கல் கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு தையல்நாயகி அம்பிகா சமேத அருள்மிகு தழவகொழுந்தீஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேகம் வெகு விமரசையாக நடைபெற்றது.தழவ கொழுந்தீஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேகம்பரிக்கல் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு தையல்நாயகி அம்பிகா சமேத தழவ கொழுந்தீஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேகம் 75 ஆண்டுகளுக்குப் பிறகு வெகு விமரிசையாக நடைபெற்றது. புதுப்பிக்கப்பட்ட இந்த கோயிலின் அருகே அமைக்கப்பட்டு இருந்த யாகசாலையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை விக்னேஸ்வர பூஜை கணபதி ஹோமம் செய்யப்பட்டு முதற்கால யாகசாலை நடைபெற்றது.புனித நீர் அடங்கிய கலசங்களுக்கு சிறப்பு பூஜைதொடர்ந்து நேற்று சனிக்கிழமை காலை இரண்டாம் கால யாகசாலை பூஜையும் மாலை மூன்றாம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றது அப்பொழுது புனித நீர் அடங்கிய கலசங்கள் யாகசாலையில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது தொடர்ந்து இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மங்கள வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்றது.புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம்அப்பொழுது வேத மந்திரங்கள் முழங்க ஊர்வலமாக பூஜை செய்யப்பட்ட கலசங்களை சுமந்து வந்த சிவாச்சாரியார்கள் கோபுர கலசம் மற்றும் பரிவார தெய்வங்கள் விமானங்களில் மலர் அர்ச்சனை செய்து கலசங்கள் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.ஓம் நமச்சிவாய என முழக்கம் அப்பொழுது அங்கு திரண்டு இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஓம் நமச்சிவாய என முழக்கம் எழுப்பி வழிபட்டனர் தொடர்ந்து மகா தீபாராதனையும் நடைபெற்றது அதன் பின்பு மூலவர் மற்றும் அம்பாளுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் பரிக்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். Related Link மாயா கிருஷ்ண சுவாமி கோயில் குடமுழுக்கு