news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சாலையில் படுத்து மறியல்
tv

Also Watch

tv

Read this

சாலையில் படுத்து மறியல்

ராணிப்பேட்டை

118

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
citu main

மத்திய அரசின் கொள்கைகளை எதிர்த்து ராணிப்பேட்டையில் தொழிற்சங்கங்கள் ஒன்று திரண்டு ஊர்வலமாக சென்றும் சாலையில் படுத்துக்கொண்டும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்தியில் ஆளும் பாஜக அரசை கண்டித்து போராட்டம்

ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையத்தில் மத்தியில் ஆளும் பாஜக அரசின் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கூட்டமைப்பின் சார்பாக CITU மாவட்ட செயலாளர் தவராஜ், LPF மாவட்ட கவுன்சில் செயலாளர் மற்றும் தலைவர் பன்னீர்செல்வம் AITUC மாவட்ட செயலாளர் மேஸ்திரி சங்கர் ஆகியோர் தலைமையில் பொது வேலை நிறுத்த மறியல் போராட்டம் நடைபெற்றது.


என்ன, என்ன கோரிக்கைகள்?

இந்த மறியல் போராட்டத்தின் போது அனைத்து தொழிற்சங்கங்கள் தெரிவிக்கையில்...

தொழிலாளர் உரிமைகளை 4 புதிய தொழிலாளர் சட்ட தொகுப்புகளை ரத்து செய்ய வேண்டும்

8 மணி நேர வேலை என்பதை நீட்டிக்கும் முயற்சியை கைவிட வேண்டும்

சங்கம் அமைக்கும் உரிமையை பாதுகாத்திட வேண்டும்

வங்கி, எல்.ஐ.சி, ரயில்வே பி.எஸ்.என்.எல், எஃகு ஆலை, பாதுகாப்பு துறை உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்

அங்கன்வாடி, ஆஷா, மக்களைத்தேடி மருத்துவ ஊழியர்களை பணிநிரந்தரம் செய்து மாத ஊதியம் 26,000 ரூபாய் வழங்கிட வேண்டும்

அனைத்து தொழிலாளர்களுக்கும் மாத ஓய்வூதியம் 9,000 ரூபாய் வழங்கிட வேண்டும்

பாரம்பரிய தொழிலான பீடி கைத்தறி, தீப்பெட்டி மண்பாண்டம் போன்ற தொழில்களில் பாதுகாக்க வேண்டும்


சாலையில் படுத்துக்கொண்டு மறியல்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பிய தொழிற்சங்கங்கத்தை சேர்ந்தவர்கள் ஊர்வலமாக ஒன்று திரண்டு சாலையில் படுத்துக்கொண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கைது

அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் ஏராளமானோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

Related Link
அடுத்தடுத்த மூன்று வீடுகளில் திருட்டு

அடுத்தடுத்த மூன்று வீடுகளில் திருட்டு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 15042026

2
8 mins agoshare
இன்றைய ராசி பலன்கள் 15042026button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved