தீ விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த காரைக்குடி அருகே உள்ள குன்றக்குடி சண்முகநாதன் கோவில் யானை சுப்புலட்சுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.இந்த யானை 1971-ம் ஆண்டு பக்தர் ஒருவரால் கோவிலுக்கு வழங்கப்பட்டு கோவில் நிர்வாகத்தால் பராமரிக்கப்பட்டு வந்தது.இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்பு கோவில் மலை அடிவாரத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் அருகே கட்டி வைக்கட்டிருந்த யானைக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டன.இதனால் அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சுப்புலட்சுமி யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.உயிரிழந்த குன்றக்குடி கோவில் யானை சுப்புலட்சுமிக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் மரியாதை செலுத்தினார்.