காரைக்கால்- பேரளம் இடையிலான அகல ரயில் பாதையில் சோதனை ஓட்டம் வெற்றி பெற்றதாக, தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்தார். மயிலாடுதுறை ரயில்வே நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 23 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடந்து வரும் விரிவாக்க பணிகளை பார்வையிட்டவர், விழுப்புரம், தஞ்சை இடையிலான இரட்டை வழி ரயில்பாதை பணிகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றார்.