சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோயிலில், கந்த சஷ்டி திருவிழாவின் 2ம் நாளான இன்று, அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. சண்முகருக்கு பால், பன்னீர், தயிர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு நறுமணப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரமும் வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் முழங்க ஓதுவார்கள் தேவாரம் பாட ஆறுமுகத்திற்கும் மகா தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்வில் மண்டகப்படிதாரர்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.