சென்னையில், அக்டோபர் மாதத்தில், தங்கத்தின் விலை பல வரலாறு காணாத உச்சங்களைத் தொட்ட நிலையில், சில நாட்களில் குறைந்த நிலையில், இன்று மீண்டும் விலை அதிகரித்துள்ளது. தீபாவளிக்கு பிறகு, தங்கத்தின் விலை படிப்படியாகக் குறைந்து வந்தது. இன்று மீண்டும் உச்சத்தைத் தொட்டு, முதலீட்டாளர்கள் மற்றும் பொது மக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.இன்றைய விலை நிலவரம்: 22 கேரட் ஆபரணத் தங்கம், ஒரு கிராமுக்கு, ரூ.100 அதிகரித்து ரூ.11,500 ஆக விற்கப்படுகிறது. ஒரு சவரன் (8 கிராம்) ரூ.800 விலை உயர்ந்து ரூ.92,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை நிலவரம்: வெள்ளியின் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையிலேயே விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி, நேற்றைய விலையான ரூ.170 ஆகவே தொடர்கிறது. ஒரு கிலோ வெள்ளி, ரூ.1,70,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது.