சேது எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணி ஒருவர் தவறவிட்ட நகையுடன் கூடிய பெட்டியை ரயில்வே போலீசார் பத்திரமாக மீட்டுக் கொடுத்தனர். தூத்துக்குடி மாவட்டம் பனையூர் தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்த பாரதி கண்ணன், குடும்பத்தினரோடு சென்னையிலிருந்து பரமகுடிக்கு சேது எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த போது அவர் கொண்டு சென்ற சூட்கேட்ஸை ரயிலிலேயே தவறவிட்டு விட்டு பரமக்குடியில் இறங்கியுள்ளார்.சிறிது நேரத்தில் சூட்கேஸ் தவறவிட்டதை உணர்ந்தவர், ரயில்வே ஹெல்ப்லைன் எண் 139 தொடர்பு கொண்டு நடந்தை கூற பணியிலிருந்த ரயில்வே போலீசார் சூட்கேசை மீட்டு பாரதி கண்ணனிடம் ஒப்படைத்தனர், 20 பவுன் தங்க நகை 2 ஆயிரத்து 500 ரூபாய் பணம் இருந்த சூட்கேஸை மகிழ்வோடு பெற்றுக் கொண்ட தம்பதியர் ரயில்வே போலீசாருக்கு நன்றி தெரிவித்து சென்றனர்.