புதுச்சேரியில் வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஜீவசமாதி அடையும் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் குளத்தில் குதித்து பெண் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.செட்டிகுளத்தில் சாலையோரம் 18க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் பஞ்சாயத்து அதிகாரிகள் காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பினர்.இந்நிலையில் அரசு இடத்தை ஒதுக்கி தருமாறு பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் நாகமுத்து அம்மன் கோயில் அருகே ஜீவசமாதி அடையும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் கைது செய்ய துணை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.அப்போது போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில் 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.