Also Watch
Read this
By: Fyrose Banu

சேலம் மாவட்டம் பேளூரில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் தர்மசாவர்தினி ஆலயம் அமைந்துள்ளது. இங்கு வசிட்ட முனிவர் யாகம் செய்ததாக வரலாறு கூறுகிறது இக்கோயில் அறநிலையத் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. 
குடமுழுக்கு பணிகள் தீவிரம்
கோயில் குடமுழுக்கு விழா வருகின்ற 25.3.2026 அன்று நடைபெற உள்ளவ்நிலையில் கோயில் கோபுரத்தில் வர்னம் தீட்டும் பணிகள் முடிவடைந்து கோயில் உள்பிரகாரத்தில் துரிதமாக வேலைகள் நடைபெற்று வருகிறது.
மாயமான கோயில் மணிகள்
இந்நிலையில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியா 63 கிலோ எடை கொண்ட பெரிய மணி இது நவகிரகங்கள் மேல் தளத்தில் அமைந்துள்ளது மற்றும் 10 கிலோ எடை கொண்ட மணிகள் இரண்டும் பத்து நாட்களுக்கு முன் கோயில் உள்பிரகாரத்தில் உள்ள செயல் அலுவலர் கட்டிடம் அருகே வைத்து துணிகளால் மூடி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இரண்டு மணிகளும் காணவில்லை
இந்நிலையில் தற்போது இரண்டு மணிகளும் காணவில்லை என்ற வீடியோ வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. வருகின்ற 25ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற இருக்கின்ற சூழ்நிலையில் பக்தர்களால் வழங்கப்பட்ட இரண்டு மணிகளும் காணாமல் போயுள்ளதால் பக்தர்களும், சமூக ஆர்வலர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.’

மணிகள் திருட்டு போனதா?
இதுகுறித்து கோயில் செயல் அலுவலர் கஸ்தூரி இடம் விசாரித்த போது சரியான தகவல் கூறாமல் மணிகள் அங்கு தான் இருப்பதாக சாதாரணமாக கூறுகின்ற நிலையில் மணி தொடர்பாக இன்னும் காவல் நிலையத்தில் புகார் எதுவும் தெரிவிக்காததால் மணி திருட்டு போனதா அல்லது செயல் அலுவலர் மழுப்பலாக பதில் கூறுவதால் கோயில் மணி கையாடல் செய்யப்பட்டதா என துரிதமாக விசாரணை செய்யுமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved