news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பலமுறை மனு கொடுத்தும் பட்டா வழங்காமல் அலட்சியம்
tv

Also Watch

tv

Read this

பலமுறை மனு கொடுத்தும் பட்டா வழங்காமல் அலட்சியம்

விருத்தாசலம், கடலூர்

12

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CDL Protest

பட்டா வழங்காமல் அலட்சியம்  : 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம் கம்மாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கோ பொன்னேரி, கோ ஆதனூர், ஊமங்கலம், இருளக்குறிச்சி, குமாரமங்கலம், முதனை
உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வசிக்கும் மக்கள் பல ஆண்டுகளாக குடி இருக்க வீட்டு மனை இல்லாமல் ஒண்டி குடித்தனம் நடத்தி வருவதாகவும்.

இவர்கள் வீட்டு மனை பட்டா கேட்டு பல முறை மனு அளித்தும், பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் பட்டா வழங்காத அதிகாரிகளின் அலட்சிய போக்கை கண்டித்தும், குடிமனை பட்டா
மற்றும் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 200 கும் மேற்பட்டோர்.

விருத்தாசலம் பாலக்கரை சந்திப்பில் இருந்து கைகளில் கொடியை ஏந்தி பேரணியாக சென்று கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட உள்ள நிலையில் அவர்களை செல்ல விடாமல் விருத்தாசலம் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் இருதரப்பினருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தொடர்ந்து காவல்துறை தடையையும் மீறி கோட்டாட்சியர் அலுவலகம் வரை பேரணியாக சென்று அனைவரின் மனுக்களையும் சேகரித்து கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனுக்கள் அளிக்கப்பட்டது.

காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கு இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால இந்த பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.

Related Link
தேனி அருகே 4 வழிச்சாலைக்காக இடிக்கப்பட உள்ள வீடுகள்

தேனி அருகே 4 வழிச்சாலைக்காக இடிக்கப்பட உள்ள வீடுகள்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 அதிகரிப்பு

4
8 mins agoshare
இன்றைய தங்கம் விலை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved