திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அடுத்த ஸ்ரீகாளிகாபுரத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் புதிய கழிவறை கட்டடம் திறப்பு விழாவில் திமுகவினர் தேசிய ஊரக வேலைக்கு சென்ற பணியாளர்களை அழைத்து வந்து அமர வைத்ததோடு, பள்ளி மாணவர்களை தரையில் அமர வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. 24 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கழிவறையை மாநிலங்களை உறுப்பினர் என்.ஆர்.இளங்கோ திறந்து வைத்தார்.