செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் அடுத்த திருவிடந்தையில் 10ஆம் ஆண்டு சர்வதேச பலூன் திருவிழாவை அமைச்சர்கள் ராஜேந்திரன், தா.மோ அன்பரசன் தொடங்கி வைத்தனர். 12ஆம் தேதி வரை மூன்று நாட்கள் திருவிழா நடைபெறும் நிலையில் பிரான்ஸ், ஆஸ்திரேலியா, பிரேசில்,பெல்ஜியம், தாய்லாந்து, வியட்நாம் உள்ளிட்ட 8 நாடுகளின் வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.