பழனி முருகன் கோவிலில் ஓய்வுபெற்ற நீதிபதி பொங்கியப்பன் தலைமையிலான சிலை பாதுகாப்பு குழுவினர், நவபாஷாண சிலையை திடீரென ஆய்வு செய்ததால் 3 மணி நேரம் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. ஐஐடி குழுவினருடன் கோவிலுக்கு வந்த சிலை பாதுகாப்பு குழுவினர், கருவறைக்குள் சென்று நவபாஷாண சிலையின் உறுதித் தன்மை உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தனர்.