தாம் தீவிர விஜய் ரசிகர் என்றாலும், அஜித்தை மிகவும் பிடிக்கும் என "லப்பர் பந்து" திரைப்படத்தின் கதாநாயகன் ஹரீஷ் கல்யாண் கூறினார். மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே உள்ள தியேட்டரில் படத்தின் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து மற்றும் ரசிகர்களுடன் இணைந்து படம் பார்த்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், "லப்பர் பந்து" படத்தின் வாழ்வியலும், கதைக்களமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிற நோக்கத்தில் தேர்வு செய்ததாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து, தனது தந்தை கொத்தனார் என்பதால் ஊரிலும் தெருவிலும் தன்னை கொத்தனார் மகன் என்று அழைப்பதால் ட்விட்டரில் கொத்தனாரின் மகன் என வைத்துள்ளதாக தெரிவித்தார்.