பாரில் சட்டவிரோத மது விற்பனை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பாதரக்குடி பகுதியில் கடை எண் 7744 என்ற மதுபான கடை மது அருந்தும் கூடத்துடன் செயல்பட்டு வருகிறது. மதுபான பார் எடுத்தவர் மூலம் சட்ட விரோதமாக இரவு மற்றும் அதிகாலை 5 மணி முதல் அரசு டாஸ்மாக் மதுக்கடை திறக்கும் வரை சட்ட விரோதமாக மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.இது குறித்து குன்றக்குடி காவல்துறைக்கு பொதுமக்கள் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாக உள்ளது. மேலும் அதிகாலையில் சட்ட விரோதமாக மது வாங்கிச் சென்று அருந்துவதன் மூலமாக தான் மது போதையில் அதிகப்படியான சட்ட விரோத செயல்கள் நடைபெற்று வரும் நிலையில்.காரைக்குடி அருகே பட்ட பகலில் பொது வெளியில் அதிகாலை முதலே மது விற்பனை குறித்து தகவல் தெரிந்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்பது சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வேதனையாக உள்ளது. Related Link கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கூலித் தொழிலாளி கைது