கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மின்சாரம் தாக்கி கணவன் மனைவி உயிரிழந்த சம்பவத்தில் பக்கத்து வீட்டை சேர்ந்த வழக்கறிஞரை போலீசார் கைது செய்தனர். நாகர்கோவில் திலகர் தெருவை சேர்ந்தவர்கள் ரத்தினமணி - நீலா தம்பதியினர். சம்பவத்தன்று நீலா துணிகளை உணர்த்துவதற்காக கொடிக் கம்பியில் துணிகளை போட்டபோது மின்சாரம் தாக்கியது. மனைவியின் சத்தம் கேட்டு வந்த கணவனும் செய்தவதறியாமல் அவரை பிடித்தப்போது அவரையும் மின்சாரம் தாக்கியது. இதில் இருவரும் உயிரிழந்த நிலையில், போலீசார் உடல்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அதில் பக்கத்து வீட்டை சேர்ந்த வழக்கறிஞர் கரி என்பவரின் இல்ல நிகழ்ச்சிக்காக பொருத்தப்பட்டிருந்த அலங்கார மின் விளக்குகள் கொடிக்கம்பி மீது உரசி மின்சாரம் தாக்கியது தெரியவந்தது.