news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews கோடை சீசனுடன் ஹோம் மேட் சாக்லேட் வியாபாரமும் சூடு பிடிப்பு
tv

Also Watch

tv

Read this

கோடை சீசனுடன் ஹோம் மேட் சாக்லேட் வியாபாரமும் சூடு பிடிப்பு

கொடைக்கானல், திண்டுக்கல்

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Home Made Chocolate

ஹோம் மேட் சாக்லேட் : 

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் தற்போது கோடை சீசன் தொடங்கிய நிலையில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அவ்வாறு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் அந்தந்த சீசன் காலங்களில் விளைவிக்கக் கூடிய பிலம்ஸ் ,பேரி பிச்சீஸ், பட்டர் ஃப்ரூட் உள்ளிட்ட பழங்களை வாங்கி செல்கின்றன.

இதில் குறிப்பாக வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய ஹோம் மேட் சாக்லேட் வகைகள் கொடைக்கானலில் இருக்கக்கூடிய அனைத்து சுற்றுலா பகுதிகளிலும் கிடைக்கிறது. இது ஒரு குடிசை தொழிலாக இருப்பதால் 1000 கணக்கான கடைகளில் இந்த ஹோம் மேட் சாக்லேட் விற்பனை செய்யப்படுகிறது.


இதில் முந்திரி, பாதாம், பிஸ்தா, தேன் உள்ளிட்ட பல்வேறு சுவைகளில் பல்வேறு வடிவங்களில் தயாரிக்கப்படுகிறது. எதிலும் குறிப்பாக குழந்தைகளை கவரக்கூடிய லாலிபாப் மற்றும் மோல்டிங் சாக்குலேட்டு வகைகள் தயாரிக்கப்படுகின்றன.

மேலும் ஒரு கிலோ 600 ரூபாய் முதல் 4000 ரூபாய் வரையில் விதவிதமாக , வித்தியாசமான சுவைகளில் தயார் செய்யப்படுகிறது. மேலும் சக்கரை நோய் உள்ளவர்களுக்கு சுகர் ஃப்ரீ முறையில் சாக்லேட் தயார் செய்யப்படுவதால் இந்த சாக்லேட் சென்னை, கோவை, பெங்களூர்,மும்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.


தற்போது கொடைக்கானலில் கோடை விழா நடைபெற்று வரும் நிலையில் ஹோம் மேட் சாக்லேட் வியாபாரம் தற்பொழுது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதனால் சாக்லேட் வியாபாரிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Link
புனித ஜெபமாலை அன்னை ஆலய பெருவிழா கொடியேற்றம்

புனித ஜெபமாலை அன்னை ஆலய பெருவிழா கொடியேற்றம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு

0
8 hrs 41 mins agoshare
Gold rate








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved