news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews எட்டு மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு; வானிலை தகவல்
tv

Also Watch

tv

Read this

எட்டு மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு; வானிலை தகவல்

சென்னையில் மழை நிலவரம்

27

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
rain

தமிழகத்தில் ஆகஸ்ட் 23ஆம் தேதி, டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில், சென்னை உள்பட பல மாவட்டங்களில் கடும் வெயில் சுட்டெரித்து வந்ததால், இரவு முழுவதும் கடும் புழுக்கம் நிலவியது.
இந்நிலையில், இன்று அதிகாலை சென்னை, புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து குளிர்வித்தது.


சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:

ஒடிசா - மேற்கு வங்க கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்க கடல் பகுதிகளில், ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி உருவாகக்கூடும்.

தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஆகஸ்ட் 23ஆம் தேதி ஒரு சில இடங்களிலும், ஆகஸ்ட் 24 முதல் 28ஆம் தேதி வரை ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.


ஆகஸ்ட் 23-ம் தேதி:

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள், கடலூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.


மழை பதிவு நிலவரம்:

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக,

சென்னை ஒக்கியம் துரைப்பாக்கத்தில் 12 செமீ
ஈஞ்சம்பாக்கம், ராஜா அண்ணாமலைபுரம் 11 செமீ
அடையார் 10 செமீ


பள்ளிக்கரணை, கண்ணகி நகர், மேடவாக்கம் 9 செமீ 

சைதாப்பேட்டை, நீலாங்கரை 7 செமீ
வேளச்சேரி, அண்ணா பல்கலைக் கழகம் 6 செமீ

இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

4
17 hrs 18 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved