Also Watch
Read this
By: Web Team

வைகை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான வருசநாடு சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. தேனி மாவட்டம், வைகை ஆறு உற்பத்தியாகும் வருசநாடு, மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே தினமும் பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக கொட்டித் தீர்த்த கன மழையின் காரணமாக, நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இன்று 3ஆவது நாளாக, கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக தேனி - வருசநாடு சாலையில் பல்வேறு இடங்களில் மழை நீர், ஆறு போல் ஓடியது. தொடர் மழை காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொது மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
தொடர் மழையின் காரணமாக மண்ணின் ஈரப்பதம் அதிகரித்துள்ளதால், தரிசு நிலங்களை உழவு செய்து பயிர் செய்யும் பணியை தொடங்க உள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved