மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே விநாயகர் சிலையை கரைக்க சென்ற சுமை தூக்கும் தொழிலாளி கிணற்றில் தவறி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெய்ஹிந்த்புரம் அருகே உள்ள சோலைஅழகுபுரத்தைச் சேர்ந்த சிவன் காளை என்பவர் விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக இளைஞர்களுடன் அழகு சிறை கிராமத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்குள்ள கிணற்றில் சிலைகளை கரைக்க தள்ளிவிட்ட போது, எதிர்பாராத விதமாக சிவன் காளையும் கால் தவறி கிணற்றில் விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் சிறுது நேரம் போராடி சிவன் காளை உடலை சடலமாக மீட்டனர்.