கோயம்புத்தூர் அருகே வாளையார் பகுதியில், காரில் கொண்டு செல்லப்பட்ட 2 கோடியே 54 லட்சம் ஹவாலா பணத்தை, கேரள சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கோயம்புத்தூரில் இருந்து கேரளாவிற்கு பணத்தை காரில் கடத்தி சென்ற ராஜஸ்தான் மாநில இளைஞர் பவானி சிங் கைது செய்யப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்ட பணம் பாலக்காட்டில் உள்ள வருமானவரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. யாருக்காக பணம் கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்து கேரள சுங்கத்துறை அதிகாரிகள் பவானி சிங்கிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.கோவை வழியாக, கேரளாவிற்கு ஹவாலா பணம் கடத்தப்படுவதாக கேரள சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வாளையாறு சோதனைச்சாவடி அருகே சுங்கத்துறை ஆய்வாளர் பிரசாந்த் தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டபோது இந்த பணம் சிக்கி உள்ளது.