தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் கோவிலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு வழிபாடு நடத்தினார். கோவில் நிர்வாகம் சார்பில் ஆளுநருக்கு தலைப்பாகை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்ட நிலையில், மனைவியுடன் சிறப்பு வழிபாடு நடத்தினார். பின்னர், இருவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் இனிமம் வழங்கப்பட்டது.