Also Watch
Read this
By: Fyrose Banu

வேலூர் அடுத்த பெருமுகை பகுதியில் ரூபாய் 46 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசினர் விடுதியை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இம்மாதம் இறுதிக்குள் திறந்து வைப்பார் என மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
250 படுக்கை வசதிகளுடன் அரசினர் விடுதி

வேலூரில் மருத்துவ வசதியை பெறுவதற்காகவும், கல்விம் ஆன்மீக சுற்றுலா உள்ளிட்டவைகளுக்காக பொதுமக்களின் வருகை அதிகரித்து இருப்பதால் அரசின் சார்பில் 46 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெருமுகை என்ற இடத்தில் 250 படுக்கை வசதிகளுடன் அரசினர் விடுதி கட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தமிழ்நாட்டில் நீண்ட காலமாக கட்டப்படாமல் இருந்த 1,100 தரை பாலங்கள் மேம்பாலாங்களாக உயர்த்தி கட்டப்பட்டுள்ளது என்றும் மீதமுள்ள பாலங்கள் கட்டப்பட்டு வருவதாகவும் கூறிய அமைச்சர் சில பாலங்கள் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

பெரு முகை வரை சுற்றுச்சாலை
மேலும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 102 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காட்பாடியில் இருந்து பெரு முகை வரை சுற்றுச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்போது அதற்கான பணிகள் துவக்கப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாட்டில் இதுவரை 70 ரயில்வே மேம்பாலங்களளில் 36 பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டும், மீதமுள்ள 11 பாலங்கள் நிதித்துறையின் அனுமதிக்காக வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved