தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் ஊருக்குள் செல்லாமல் நள்ளிரவில் அரசு பேருந்து சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. திருநெல்வேலியில் இருந்து வந்த பேருந்து புதுக்குடியில் பயணிகளை இறக்கி விட்டதால் ஆத்திரமடைந்த பயணிகள் ஒன்று திரண்டு வந்து பேருந்தை சிறைப்பிடித்துள்ளனர்.எங்கள் சங்கம் நினைத்தால் தமிழ்நாடே ஸ்தம்பிக்கும் என நடத்துனர் செம ரூடாக மது போதையில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் போக்குவரத்து கழகத்தினரை வரவழைத்த போலீசார் இரவு நேரம் என்பதால் பயணிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக நடத்துனரை எச்சரித்து தொடர்ந்து பேருந்தில் செல்ல அனுமதித்துள்ளனர்.