செங்கல்பட்டில், பேருந்தை ஏன் நிறுத்தவில்லை என்று கேட்ட பெண் பயணியிடம் தகராறில் ஈடுபட்ட அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரை தற்காலிக பணிநீக்கம் செய்து போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. சென்னையிலிருந்து சிதம்பரம் நோக்கி கிழக்குக் கடற்கரை சாலை மார்க்கமாக சென்ற அரசுப் பேருந்தை பனையூர் சுங்கச்சாவடியில் பெண் ஒருவர் கை காட்டி நிறுத்த முயற்சி செய்துள்ளார். அங்கு நிற்காமல் சென்ற பேருந்து கல்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வந்தபோது, வேறு பேருந்து மூலம் அங்கு வந்த பெண் பேருந்தை ஏன் நிறுத்தவில்லை என்று கேள்வியெழுப்பிய போது அப்பெண்ண ஓட்டுநரும் நடத்துனரும் தகாத வார்த்தையில் திட்டி அடிக்க பாய்ந்த வீடியோ வைரலான நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.