ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே பேருந்து பயணியிடம் இருந்து அரை கிலோ தங்க கட்டிகள் மற்றும் 100 அமெரிக்க டாலர் பறிமுதல் செய்யப்பட்டது. ரகசிய தகவலின் பேரில் ஹைதராபாத்தில் இருந்து கோவை நோக்கி சென்ற பேருந்தை சோதனையிட்ட போது பூவிழி வாசன் என்ற நபர் ஆவணமின்றி தங்க கட்டிகள் மற்றும் அமெரிக்க டாலர் எடுத்து சென்றது தெரிய வந்தது.