சென்னையை அடுத்த குன்றத்துார் அருகே உள்ள கல்குவாரிகளில் உள்ள நீர்நிலைகளில் அதிகளவு குப்பைகள் மற்றும் மருத்துவ கழிவுகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது. சிக்கராயபுரத்தில் உள்ள 25 கல்குவாரி குட்டையில் எப்போதும் தண்ணீர் நிரம்பியே காணப்படுகிறது.இந்நிலையில், இந்த கல்குவாரி குட்டைகளில் நெகிழி கழிவுகள், உணவுப் கழிவுகள் மட்டுமின்றி மருத்துவ கழிவையும் மர்மநபர்கள் கொட்டியுள்ளனர்.2016-2017 ஆம் ஆண்டு சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறட்சியான போது சிக்கராயபுரம் கல்குவாரியில்தான் தண்ணீரை சுத்திகரிப்பு செய்து குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.