Also Watch
Read this
By: Web Team

6 மணி நேரமாக மின்சாரம் துண்டிக்கப்பட்ட ஆத்திரத்தில் வடசென்னை திருவொற்றியூர் அருகே மக்கள் இரவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர் கனமழை காரணமாக தியாகராஜபுரம் பகுதியில் கடந்த 3 நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு வந்த நிலையில், மின்வாரிய அதிகாரிகளின் செல்போனுக்கு தொடர்பு கொண்டாலும் அழைப்பை ஏற்கவில்லை என மக்கள் குற்றம்சாட்டினர். மழை நின்ற போதிலும் கூட மின்சாரம் வழங்கப்படவில்லை என கூறி நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபடவே, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved