நாமக்கல்லில் பாஜக சார்பில் நடத்தப்பட்ட இலவச மருத்துவ முகாமில் பங்கேற்ற பொதுமக்களுக்கு, அக்கட்சியில் சேர்ந்ததற்கான உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சத்திரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், பாஜக மருத்துவ பிரிவு சார்பில் தனியார் மருத்துவமனை பங்களிப்புடன் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.அதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று பரிசோதனைகளை செய்து கொண்டு மருத்துவ ஆலோசனைகளை பெற்றனர். அவர்களது ஆதார் மற்றும் தொலைபேசி எண்ணை வாங்கிய பாஜகவினர், அக்கட்சியில் சேர்ந்ததற்கான உறுப்பினர் அட்டையை கொடுத்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.