news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews டிஜிட்டல் கைது என மிரட்டி லட்சக்கணக்கில் பணம் மோசடி
tv

Also Watch

tv

Read this

டிஜிட்டல் கைது என மிரட்டி லட்சக்கணக்கில் பணம் மோசடி

மதுரை

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
லட்சக்கணக்கில் பணம் மோசடி

லட்சக்கணக்கில் பணம் மோசடி  : 

மதுரை மாவட்டத்தில் தனியாக வீடுகளில் உள்ள ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களை குறிவைத்து இணையதள கும்பல் தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டு கோடி கோடியான பணத்தினை ஆன்லைன் மூலமாக திருடிவருகின்றனர்.

மதுரை மகாத்மாகாந்திநகர் பகுதியை சேர்ந்த சங்கரமூர்த்தி என்ற ஓய்வுபெற்ற தனியார் இன்சூரன்ஸ் நிறுவன உதவி மேலாளருக்கு கடந்த ஏப்ரல் மாதம் அலைபேசி மூலமாக தொடர்புகொண்ட நபர் ஒருவர் சென்னை டி.ஜி.பி., அலுவலகத்தின் கிரைம் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் என்று அறிமுகப்படுத்தியதோடு 'லக்னோ தீவிரவாத தடுப்பு படையில் உங்கள் மீது வழக்குப்பதிவு செய் யப்பட்டுள்ளதாக இந்தியில் கூறியுள்ளனர்.

பின்னர் வாட்ஸ் ஆப் வீடியோ காலில் வேறு ஒருவர் லக்னோ தீவிரவாத தடுப்பு படைஅதிகாரி பிரேம்குமார் என்றும், தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரி என கூறி சீருடையில் இருந்தபடி பேசியுள்ளனர்.

தொடர்ந்து சங்கரமூர்த்தி யின் வாட்ஸ் ஆப்பிற்கு 'பிடிவாரன்ட்' நகல்களை அனுப்பி, 'உங்கள் டெபிட் கார்டு மூலம் 2.5 கோடி மோசடி நடந்துள்ளது எனவும், டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு வழக்கில் கைதான பெண் தீவிரவாதி டாக்டரிடம் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் உங்களுடையது. இதனால் விசாரணைக்காக லக்னோ வர வேண்டும்' என கூறினர்.

வரமுடியாது என கூறியதால் உங்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்கிறோம் என கூறி மறுநாள் மீண்டும் தொடர்பு கொண்டு, 'ரிசர்வ் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்ப வேண்டும். ஆய்வுக்கு பின் மீண்டும் உங்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என கூறியுள்ளனர்

இதனால் பதட்டமடைந்த சங்கர மூர்த்தி தனது நிரந்தர வைப்புத் தொகை, சேமிப்புத்தொகை யில் இருந்து என பல தவணைகளாக மொத்தம் ரூ.85 லட்சம் அனுப்பியுள்ளார்.

பின்னர் வீட்டுருகே உள்ள காவல்நிலையத்திற்கு சென்று NOC சான்றிதழ் பெற்றுக்கொள்ளுங்கள்' என்று கூறியதால் சங்கர மூர்த்தி கூடல் புதுார் காவல்நிலையத்திற்கு சென்று விசாரித்தபோது மோசடி மூலமாக பணத்தை திருடியது தெரியவந்துள்ளது. இதையடுத்து சைபர்கிரைம் காவல்நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

இதேபோன்று மதுரை கூடல்நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி இசை ஆசிரியையிடம் நாகலெட்சுமி - வெங்கட்ரமணிணன் தம்பதியினரை தீவிரவாத கும்பலுடன் தொடர்பு என கூறி டிஜிட்டல் அரெஸ்ட் செய்துள்ளோம் என வீடீயோ கால் மூலமாக மிரட்டியுள்ளனர்.

83 லட்சம் ரூபாய் பணத்தினை பரிமாற்றம் செய்தால் ஒரு வாரத்திற்குள் மீண்டும் திரும்பி அனுப்படும் இல்லையென்றால் சிங்கப்பூரில் உள்ள மகன் குடும்பத்தினரை கைது செய்வோம் என மிரட்டி 83 லட்சம் பணத்தை மோசடி செய்துள்ளனர்.

இது தொடர்பாகவும் சைபர் கிரைம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் கீழ் வேலூர் மாவட்டம் வசந்தபுரம் பகுதியை சேர்ந்த அப்துல்பசூல்ரகுமான், ஜாவித், சகாபுதீன் ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதேபோன்று மதுரையைச் சேர்ந்த அரசு பணியில் ஓய்வுபெற்ற பெண் ஒருவரிடம் ஒரு கோடியே 15 லட்சம் ரூபாய் வரை தீவிரவாதிகள் தொடர்பில் இருப்பதாக கூறி தீவிரவாதிகள் என்ற பெயரில் புகைப்படங்களை அனுப்பி டிஜிட்டல் அரெஸ்ட் செய்யப்பட்டதாக கூறி தனது வங்கியில் உள்ள பணங்களை எல்லாம் மோசடி கும்பலின் வங்கி கணக்கு பரிமாற்றம் செய்துள்ளார்.

மேலும் வீட்டில் உள்ள நகைகளை வங்கிகளில் அடகு வைக்க வைத்து தொடர்ந்து அவர்கள் வாட்ஸ் அப் கால் மூலமாக சொல்வதை கேட்டபடி அடகுவைத்து அதன் மூலமாகவும் கிடைத்த
பணத்தினை வங்கிகள் மூலமாக மோசடி கும்பல் பெற்றுள்ளனர்

இது போன்ற இணையதள மோசடி கும்பலானது வீடுகளில் தனியாக உள்ள ஓய்வு பெற்ற அரசு மற்றும் தனியார் ஊழியர்களை கண்காணித்து அவர்களிடம் இருந்து வீடியோ கால் மூலமாக
நீங்கள் தீவிரவாத கும்பலுடன் தொடர்பு இருப்பதாகவும் தீவிரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் எனக்கூறி காவல்துறையினர் போன்ற பின்னணியை வைத்துக்கொண்டு அவர்களை
மிரட்டி வங்கிகள் மூலம் பணத்தை பெற்று குரூரமான மோசடியில் ஈடுபடுகின்றனர்.

தொடர்ச்சியாக இது போன்ற மிரட்டல் விடுக்கும் கும்பல் யாரிடமும் இதனை கூறி விடக்கூடாது என மிரட்டி வீடியோ காலில் 24 மணி நேரமும் தொடர்ந்து அவர்களை கண்காணித்து மிரட்டி வருவதாகவும் அவர்கள் எந்த நபர்களுடனும் ஒரு வாரத்திற்குள் முழு பணத்தையும் திருடும் வரை யாரிடமும் தொடர்பு கொள்ளக்கூடாது என தனிமைப்படுத்தி மிரட்டி உள்ளனர். 

மேலும் 24 மணி நேரமும் அவர்கள் தூங்குவது, குளிப்பது, சமைப்பது என அனைத்து நடவடிக்கைகளையும் வீடியோ கால் மூலமாக கண்காணித்தபடியே இருந்து வந்திருக்கின்றனர்

இதனால் அச்சத்தில் யாரிடமும் இது போன்ற மிரட்டல்களை சொல்லாமல் கேட்கும் பணத்தை கொடுத்து ஏமாற்றம் அடைந்து திகைத்து நிற்கின்றனர் மத்திய மாநில அரசுகள் இணையதள முறைகேடுகள் மோசடிகள் தொடர்பாக பல விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும்.

இதுபோன்று தனியாக உள்ள ஓய்வு பெற்ற ஊழியர்களை குறிவைத்து இணையதளம் மோசடி கும்பலானது தொடர் தாக்குதலை நடத்தி பணத்தை மோசடி செய்வதோடு மட்டுமல்லாமல்
அவர்களை தனிமைப்படுத்தி மனநிலையை குழப்பும் அளவிற்கு ஈடுபடுகின்றனர்.

எனவே இது போன்ற இணையதள மோசடி கும்பல்கள் குறித்து வீடு வாரியாக ஒவ்வொரு நபர்களுக்கும் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Related Link
பூட்டிக்கிடந்த மின்வாரியத்தை கண்டு பொதுமக்கள் அதிருப்தி

பூட்டிக்கிடந்த மின்வாரியத்தை கண்டு பொதுமக்கள் அதிருப்தி



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு

0
8 hrs 10 mins agoshare
Gold rate








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved