news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews "முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆதரிக்க வேண்டும்"
tv

Also Watch

tv

Read this

"முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆதரிக்க வேண்டும்"

அண்ணாமலை அழைப்பு

32

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
annamalai

சாக்குபோக்கு சொல்லாமல் முதல்வர் மு.க.ஸ்டாலின், சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு தர வேண்டும் என்று, தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அண்ணாமலை கூறியதாவது:

சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். உறுதியாக அவர், வெற்றி பெற்று அந்த இருக்கைக்கு பெருமை சேர்ப்பார்.

தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் ஒன்றாக இருந்து, அவரை வெற்றி பெறச் செய்து அந்த இருக்கைக்கு அனுப்ப வேண்டும் என்பது எங்களின் வேண்டுகோள்.

இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு என்பதை மறு பரிசீலனை செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நேரம் இருக்கிறது.

எனவே, சாக்கு போக்கு சொல்லாமல் இதில் அரசியல் இல்லை என்று தெளிவுபடுத்துவதற்கு, ஒரு தமிழருக்கு நாம் எல்லோரும் சேர்ந்து துணை நின்றோம் என்ற ஒரு நல்ல விஷயத்தை மக்கள் மன்றத்தில் வைப்பதற்கு திமுகவுக்கு நல்ல வாய்ப்பாக இதை பார்க்கிறேன்.

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஒருமித்த ஆதரவு தமிழகத்தில் இருந்து கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏகமனதாக எங்களிடம் இருக்கிறது. அவர் அனைத்து கட்சியினரிடம் அன்பும், நட்பும் பாராட்டிய நல்ல மனிதர். துணை ஜனாதிபதியாக அவர் வருவது ஆர்எஸ்எஸ்க்கும், தமிழருக்கும் பெருமை.

விஜய்-க்கு வாழ்த்துக்கள்:

விஜய் மாநாடு நடத்தட்டும். மாநாடு நடத்த எல்லாருக்கும் உரிமை உள்ளது. ஆக்ரோஷமாக போக வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள், போகட்டும்.

எல்லாரும் அரசியல் களத்தில் இருக்கிறோம். ஆகவே, மக்கள் எங்கள் சித்தாந்தத்தையும், கொள்கைகளையும் அதிகம் நம்புவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

திமுகவை ஆட்சியில் இருந்து இறக்கி, தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று மக்கள் பேச ஆரம்பித்துவிட்டனர்.

எனவே விஜய்க்கும் வாழ்த்துக்கள், அவரது மாநாட்டுக்கும் வாழ்த்துக்கள்.

இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

3
8 hrs 32 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved