மயிலாடுதுறை மாவட்டம் பனங்குடியில் உள்ள சீதளாதேவி மாரியம்மன் திருக்கோவிலில் ரஷ்யா மற்றும் கஜகஸ்தான் நாடுகளைச் சேர்ந்த ஆறு பேர் சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு கோவில் குருக்கள் பரிவட்டம் கட்டி மாலை அணிவித்து மரியாதை செய்த நிலையில், பூஜிக்கப்பட்ட வேலுடன் பழனி முருகனை தரிசிக்க புறப்பட்டு சென்றனர்.