மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக, தாழ்வான பகுதிகளில் மழைநீருடன் கழிவு நீர் கலந்து ஓடியது. அவனியாபுரம், விமானநிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் தாழ்வான சாலைகளில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.