திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பைனான்சியரை, போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையிலடைத்தனர். ஜாம்பவானோடை கல்லடிக்கொல்லை கிராமத்தை சேர்ந்த பைனான்சியர் வீரபாண்டியன், தனது தோப்பில் வேலை பார்த்து வரும் கூலித்தொழிலாளியின் 16 வயது மகளுக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.