விழுப்புரம் மாவட்டம் பிடாகம் குச்சிப்பாளையத்தில் விவசாயிகளிடம் சாதியை கேட்டு கரும்பு கொள்முதல் செய்வதாக கூறி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பொங்கலுக்காக அதிகளவில் பன்னீர் கரும்புகளை சாகுபடி செய்த நிலையில் ஒரு ஏக்கருக்கு 120 கட்டுகள் மட்டுமே கொள்முதல் செய்வதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர். மேலும் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் சாதி பெயரை கேட்டு கொள்முதல் செய்வதாக கூறி விவசாயிகளில் மறியலில் ஈடுபட்டதால் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.