மூன்று மாதங்களுக்கு முன்பு 70 ரூபாய்க்கு விலைபோன செவ்வாழை தற்போது 30 ரூபாய்க்கு மட்டுமே விலை போவதாக தேனி மாவட்ட விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். எரசக்கநாயக்கனூர் சுற்றுவட்டார பகுதியில் செவ்வாழை அறுவடைப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சபரிமலை சீசனை முன்னிட்டு நல்ல விலை கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில் தற்போது 30 ரூபாய்க்கு மட்டுமே விலை போவதால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் குமுறினர்.