இன்சூரன்ஸ் பணத்திற்காக நகை தொலைந்து விட்டதாக பொய் புகார் கூறிய கணவன்-மனைவி விழுப்புரம் ரயில்வே போலிசாரிடம் வசமாக சிக்கினர்.சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த தம்பதி திருவாரூரில் இருந்து மன்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் விழுப்புரத்தை வந்தடைந்ததும், 296 கிராம் நகை நகை காணவில்லை என புகார் தெரிவித்தனர். சந்தேகத்தின் பேரில் அவர்கள் தங்கியிருந்த இடத்தில் ரயில்வே போலீசார் சோதனை மேற்கொண்டதில் 140 கிராம் தங்க நகைகள் மற்றும் 30 லட்சத்து 87 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் சில மாதங்களுக்கு முன்பு விஜயவாடாவில் இன்சூரன்ஸ் மோசடியில் இந்த தம்பதி ஈடுபட்டிருந்ததும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.