கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே போலி என்.சி.சி. முகாம் நடத்தி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் மேலும் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் தனியார் பள்ளியில் போலி என்.சி.சி. முகாம் நடத்தி 13 வயதுடைய மாணவி பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான நிலையில், மேலும் பல மாணவிகளுக்கும் பாலியல் ரீதியான தொல்லை நடந்துள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில் பள்ளி நிர்வாகிகள், முதல்வர், ஆசியர்கள் என 18 பேரை போலீஸார் கைது செய்திருந்தனர். இந்த சூழலில், என்.சி.சி. போலி பயிற்சியாளர் சிவராமனுக்கு உடந்தையாக இருந்ததாக காவேரிப்பட்டினத்தை சேர்ந்த சின்னத்தம்பி மகன் ரவியை போலீஸார் கைது செய்தனர்.