அமைச்சரின் முன்னாள் உதவியாளர் கைது : அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் முன்னாள் உதவியாளர் ஜெய்பாலாஜி, அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி சொத்துக்களை குவித்தேன் என வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மோசடி வழக்கில் கைதான ஜெய்பாலாஜி மற்றும் அவரது மனைவி கலாவதியை மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இரண்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். பல்வேறு பெயர்களில் பலருடன் சேர்ந்து ரியல் எஸ்டேட் நிறுவனங்களை தொடங்கி பொதுமக்களிடம் முதலீடுகளை பெற்று அவர்களுக்கு நிலத்தை கொடுக்க மனமில்லாமல் ஏமாற்ற முடிவு செய்தோம் என போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. பணம் கொடுத்தவர்கள் தகராறு செய்தபோது, தனது அரசியல் செல்வாக்கினால் மற்றவர்களை சிக்க வைத்துவிட்டு தான் தப்பியதாகவும் திமுக ஐடி விங்கிலிருந்து நீக்கப்பட்ட இலக்குவன் அவரது சகோதரர் சிவப்பிரகாசம் ஆகியோர் இணைந்தே மோசடி செய்ததாகவும் கூறியுள்ளார். இந்த நிலையில் இலக்குவன் தற்போது வெளிநாடு தப்பி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. Related Link அமைச்சரின் முன்னிலையில் கவுன்சிலருடன் வாக்குவாதம்