சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள அலுவலகத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதற்காக மேற்கொள்ளப்படும் பணிகள், எவ்வாறு பணிகளை ஒருங்கிணைத்து செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதிமுகவினர் எவ்வாறு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள் எனக் கேட்டறிந்த இபிஎஸ், எவ்வாறு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று, தேவையான ஆலோசனைகளையும் வழங்கினார். இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செம்மலை, சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன், நகர, பேரூராட்சி மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.