Also Watch
Read this
By: Fyrose Banu

அரசு ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு சிறப்பு சட்டத்தை இயற்ற வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் இரண்டாவது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்களுக்கு சிறப்பு பணி பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் ஊழியர்களின் கூட்டமைப்பு சார்பில் சேலம் மணக்காடு பகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1. அரசு ஊழியர்களுக்கு உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாக்கும் வகையில் சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும்
2. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை நில அளவை துறையில் பணிபுரிந்து வரும் அனைத்து நிலை ஊழியர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும்
3. அனைத்து துறைகளில் உள்ள தொகுப்பூதிய பணி நியமனங்களை முழுமையாக கைவிட வேண்டும்
4. அனைத்து பணியிடங்களையும் நிரந்தர அடிப்படையில் நிரப்பிட வேண்டும்
உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் மாநிலம் தழுவிய காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் இரண்டாவது நாளாக ஈடுபட்டு வருகின்றனர்.

600க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பங்கேற்பு
இந்த போராட்டத்தில் தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். மாநில துணைத்தலைவர் அர்த்தனாரி தலைமையில் நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் 600க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த போராட்டத்தால் இரண்டாவது நாளாக தேர்தல் பணி, பல்வேறு சான்றிதழ்கள் வழங்கும் பணி, மற்றும்நிலம் அளவீடு செய்யும் பணி என அனைத்து பணிகளும் முழுமையாக முடங்கியுள்ளது இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved