news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home cinemanews "வித் லவ்" நடிகை அனஸ்வரா ராஜன் விருப்பம்
tv

Also Watch

tv

Read this

"வித் லவ்" நடிகை அனஸ்வரா ராஜன் விருப்பம்

Anaswara Rajan

12

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சினிமா செய்திகள்

ஹரி இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிக்கும் அதர்வா? 

இயக்குநர் ஹரி இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிகர் அதர்வா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் ஹரி, நடிகர் பிரசாந்த்துடன் இணைந்து புதிய படத்தை இயக்குவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில், சில கருத்து வேற்பாடுகளால் அப்படத்திலிருந்து விலகினார். இந்த நிலையில், நடிகர் அதர்வாவை வைத்து புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.

"வித் லவ்" நடிகை அனஸ்வரா ராஜன் விருப்பம் :

அழுத்தமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசைப்படுவதாக நடிகை அனஸ்வரா ராஜன் தெரிவித்துள்ளார். ஒரே மாதிரியான வேடங்களில் நடிக்க தனக்கு பிடிக்காது எனவும், எப்படி இந்த கதாபாத்திரத்தில் நடித்தார்? என்று யோசிக்க வைக்கும் அளவுக்கு அழுத்தமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசைப்படுவதாகவும், தனக்கு சவால்களை சந்திப்பது மிகவும் பிடிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

"கான் சிட்டி" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி வைரல் :

"கான் சிட்டி" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. "கொரியன் ஃபேமிலி" என்கிற பாடல் வெளியாகி, ஒரு மணி நேரத்திலேயே வைரலானது. மேலும், இனி ஒருவாரத்துக்கு இதுதான் இன்ஸ்டா டிரெண்ட் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த படத்திற்கு சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

நடிகை சாய் பல்லவி நடித்துள்ள "ஏக் தின்" திரைப்படம் :

நடிகர் அமீர்கான் தயாரிப்பில், நடிகை சாய் பல்லவி நடித்துள்ள "ஏக் தின்" திரைப்படத்தின் 2-வது டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இயக்குநர் சுனில் பாண்டே இயக்கத்தில் ஜுனைத் கான் கதாநாயகனாக நடித்துள்ள இந்த திரைப்படத்துக்கு ராம் சம்பத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் மே 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Related Link
விமர்சனங்களால் உடைந்து போன விக்னேஷ் சிவன்

விமர்சனங்களால் உடைந்து போன விக்னேஷ் சிவன்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சட்ட விரோதமாக லாட்டரி விற்பனை செய்த 3 பேர் கைது

2
9 hrs 56 mins agoshare
லாட்டரி விற்பனை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved