Also Watch
Read this
Posted on: Feb 09, 2026 09:32 AM
By: Manigandan Raja
மனைவியை பிரிந்து, 18 வருடங்களாக தனியாக வாழ்ந்து வந்த கட்டட தொழிலாளி. இரவில் ரத்தம் சொட்ட சொட்ட மருத்துவமனைக்கு சென்ற சோகம். கட்டட தொழிலாளி மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய கும்பல். மூன்று நாட்களில் துடிதுடித்து அடங்கிய உயிர். கட்டட தொழிலாளியை அடித்து கொன்ற கும்பல் யார்? பின்னணி என்ன?
ரத்தினத்திற்கு ராஜேஸ்வரி என்ற பெண்ணுடன் பழக்கம்
நாமக்கல் மாவட்டம் கபிலர்மலை. ரொம்பவே அமைதியான இந்த கிராமத்துல, 5ந் தேதி வியாழக்கிழமை அன்னைக்கு நைட்டு நடந்த ஒரு கொடூர சம்பவம் அந்த கிராமத்தையே அதிர வச்சிருக்கு. 45 வயசான ரத்தினம்-ங்குறவரு ஒரு சாதாரண கட்டடத் தொழிலாளி. 18 வருஷத்துக்கு முன்னாடியே கருத்து வேறுபாடு காரணமா பொண்டாட்டி, பிள்ளைகளை பிரிஞ்சு திடுமல் கவுண்டம்பாளையத்துல தனியா வாழ்ந்துட்டு இருந்துருக்காரு. இந்த தனிமைதான் அவருக்கு ராஜேஸ்வரிங்கிற பெண்ணோட பழக்கத்த ஏற்படுத்திருக்கு. ஆனா, அந்தப் பழக்கம் அவரோட உயிருக்கே உல வைக்கப்போகுதுன்னு ரத்தினம் கனவுல கூட நினைச்சிருக்க மாட்டாரு.
அடிக்கடி தனிமையில் சந்தித்து கொண்ட ரத்தினம்-ராஜேஸ்வரி
அதே கிராமத்த சேர்ந்த ராஜேஸ்வரியோட கணவர் கடந்த சில வருஷங்களுக்கு முன்னாடி உடல்நலக்குறைவால உயிரிழந்துட்டாரு. அதுக்கப்புறம், தனியா வாழ்ந்துட்டு வந்த ராஜேஸ்வரிக்கு, ரத்தினம் கூட நெருக்கம் ஏற்பட்டுருக்கு. அடிக்கடி ரெண்டு பேரும் தனிமையில சந்திச்சு பேசி பழகிட்டு இருந்துருக்காங்க. இவங்களோட இந்த உறவு கிராமத்துல உள்ள சிலருக்கு தெரியவந்து எல்லாரும், ராஜேஸ்வரியையும், அவங்க குடும்பத்தையும் தவறா பேச ஆரம்பிச்சிருக்காங்க.
தங்கையின் தகாத உறவு தெரிந்து கொந்தளித்த ஜெயக்கொடி
ராஜேஸ்வரி - ரத்தினம் தனிமையில் இருந்ததை பார்த்த ஜெயக்கொடி
ஜெயக்கொடி என்ன எதிர்ப்பு தெரிவிச்சாலும், ரத்தினமும், ராஜேஸ்வரியும் தங்களோட பழக்கத்த தொடர்ந்துட்டே தான் இருந்துருக்காங்க. இது, ஜெயக்கொடிக்கு உச்சகட்ட ஆத்திரத்த ஏற்படுத்திருக்குது. இந்த சூழலல, 5-ந் தேதி நைட்டு ராஜேஸ்வரி, ரத்தினத்துக்கு ஃபோன் பண்ணி வீட்டுக்கு வர சொல்லிருக்காங்க. காதலி கூப்பிட்டதும் யாருக்கும் தெரியாம ரத்தினமும், அவங்க வீட்டுக்கு போயிருக்காரு. அப்படி போனதும் ராஜேஸ்வரி, ரத்தினமும் தனிமையில இருந்துருக்காங்க. அந்த நேரம் பாத்து, ஜெயக்கொடி அங்க போக, ரெண்டு பேரும் தனிமையில இருந்தத ஜன்னல் வழியா பாத்து கொந்தளிச்சு போய் நின்னுருக்காங்க.
ராஜேஸ்வரி - ரத்தினத்தை சரமாரியாக தாக்கிய கும்பல்
உடனே தன்னோட சொந்தக்காரங்க ராஜேந்திரன், இளையராஜா, வடிவேல்னு அஞ்சு பேர வரவச்சு, வீட்டுக்குள்ள புகுந்து ரத்தினத்தையும், ராஜேஸ்வரியையும் கண்மூடித்தனமா அடிச்சிருக்காங்க. ரத்த வெள்ளத்துல துடிச்ச ரத்தினம், அங்கிருந்து தப்பிச்சு கபிலர்மலை அரசு மருத்துவமனைக்கு போயிருக்காரு. அங்க முதலுதவி மட்டும் எடுத்துட்டு, பயத்துல தன்னோட சொந்தக்காரங்க வீட்டுக்கு போய் எந்த சத்தமும் இல்லாம படுத்துட்டாரு.
மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த ரத்தினம்
ஜெயக்கொடி உட்பட 5 பேரை கைது செய்த போலீசார்
அடுத்து, இந்த விஷயம் ரத்தினத்தோட சொந்தக்காரங்களுக்கு தெரிஞ்சதும், அவங்க நல்லூர் போலீஸ் ஸ்டேஷன்ல போய் கம்ப்ளைண்ட் பண்ணிருக்காங்க. அந்த புகார் அடிப்படையில வழக்குப்பதிவு செஞ்ச போலீஸ், விசாரணை பண்ணப்ப தான் இந்த கொலைக்கான காரணம் என்னங்குறது தெரியவந்துச்சு. அதுக்குப்பிறகு, கொலையாளிகளான ஜெயக்கொடி, ராஜேந்திரன் உட்பட 5 பேர கைது செஞ்ச போலீஸ், தலைமறைவா இருக்குற புஷ்பாவை தேடிட்டு இருக்காங்க.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved