Also Watch
Read this
By: Web Team

நாமக்கல் மண்டலத்தில், திங்களன்று முட்டை கொள்முதல் விலை 6 ரூபாய் 50 காசுகள் என தேசிய முட்டை ஒருகிணைப்பு குழு (NECC) நிர்ணயம் செய்துள்ளது. இதன்மூலம், கடந்த 55 ஆண்டுகளில் இல்லாத உச்சத்தை முட்டை விலை தொட்டுள்ளது. நாடு முழுவதும் முட்டையின் தேவை அதிகரித்துள்ளதால் இந்த விலை ஏற்றம் தொடரும் என்றும், நாமக்கல்லில் ஒரு நாள் கூட பண்ணைகளில் முட்டை தேக்கம் என்பதே இல்லை என்றும் தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க செயலாளர் சுந்தரராஜன் தெரிவித்தார். குளிர்காலம் மற்றும் விழா காலங்கள் முடிந்த பிறகு முட்டையின் விலை கணிசமாக குறையும் என்றும் அவர் கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved