குமரி மாவட்டம் திருவட்டார் அருகே வரதட்சணை கேட்டு மருமகளை கொடுமைபடுத்தி, அவரின் காதை கடித்து துண்டாக்கிய மாமியாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வீயனூர் பகுதியை சேர்ந்த பிரின்ஸ் என்பவரின் மனைவி மஞ்சு தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றும் நிலையில், மாமியார் அல்போன்சா வரதட்சணை கேட்டு அடிக்கடி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், புதன்கிழமை இரவு மதுபோதையில் வந்த கணவனை மஞ்சு தட்டிக் கேட்டதாகவும், அப்போது அல்போன்சா மீண்டும் தகராறு செய்து கல்லால் மஞ்சுவின் தலையில் தாக்கி, காதை கடித்து துண்டாக்கியதாகவும் கூறப்படுகிறது.