திருச்சியில் போதைக்கு அடிமையான ஆட்டோ ஓட்டுநரை கொடூரமாக கொலை செய்து விட்டு தற்கொலை என நாடகமாடிய அவரது தாய், மனைவி உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். சஞ்சீவி நகரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான குணா குடித்துவிட்டு, மனைவி சுலோச்சனா, தாய் காமாட்சி ஆகியோரிடம் தகராறில் ஈடுபட்டதாகவும் இதில் ஆத்திரத்தில் இருவரும் திருநங்கைகளை வரவழைத்து குணாவை கொன்றதாகவும் கூறப்படுகிறது.