ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற திமுக தொண்டர்களுக்கு கனிமொழி எம்.பி. அறிவுரை கூறினார். தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் 2வது முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற கனிமொழி எம்.பி., ஸ்ரீவைகுண்டம் பகுதியில் வாக்காளர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். அப்போது திமுக தொண்டர்கள் சிலர், எம்.பி. சென்ற வாகனத்தை பின்தொடர்ந்து இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் சென்றனர். இதனைப் பார்த்த கனிமொழி, உடனடியாக வாகனத்தை நிறுத்தி, ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டும்படி அறிவுறுத்தினார். பின்னர் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.