திண்டிவனம் நகராட்சியில் பட்டியலின சமூகத்தை சேர்ந்த ஊழியரை திமுக பெண் கவுன்சிலரின் காலில் விழ வைத்து மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. திண்டிவனம் நகராட்சி இளநிலை உதவியாளரான முனியப்பன், தம்மை தகாத முறையில் திட்டியதாக, 20 வது வார்டு திமுக கவுன்சிலரான ரம்யாராஜா என்பவர், நகர்மன்ற தலைவர் நிர்மலாவின் கணவர் ரவிச்சந்திரனிடம் புகார் கூறியுள்ளார். இதையடுத்து, நகராட்சி ஆணையாளர் அலுவலக அறைக்கு முனியப்பனை அழைத்து கண்டித்த ரவிச்சந்திரன், கவுன்சிலர் ரம்யாராஜாவின் காலில் விழச்சொல்லி மன்னிப்பு கேட்டதன் சிசிடிவி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.